

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆர். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார்.
பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் இணைந்து இத்தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம்.
ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது முதல் எங்களுடன்தான் இணைந்து செயல்படுகிறார்" என்றார் ரங்கசாமி.