அதிமுக கூட்டணி வெற்றி பெறாது: தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ கருத்து

சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஈ.ராஜாவை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.
சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஈ.ராஜாவை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.
Updated on
1 min read

அதிமுக கூட்டணி ஓரிடத்தில்கூட வெற்றி பெறாது என, தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஈ.ராஜாவை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால்,மோடி அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இந்த திட்டத்தை தமிழக முதல்வரும் எதிர்க்கவில்லை. இந்த அரசு அகற்றப்பட்டுவிடும். ஓரிடத்தில் கூட அவர்கள் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. நாட்டில் படித்த இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றனர். நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் 13 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறை தலைமை போலீஸ் அதிகாரியே இன்னொரு பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற செய்தியும் வந்தது. நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவார். நல்லாட்சியை தருவார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சங்கரன்கோவில், கடையநல்லூர், சுரண்டை பகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in