Last Updated : 26 Mar, 2021 07:39 PM

 

Published : 26 Mar 2021 07:39 PM
Last Updated : 26 Mar 2021 07:39 PM

அட்டைகளை அடுக்கிவைத்தா எய்ம்ஸ் கட்ட முடியும்?- உதயநிதிக்கு நடிகர் செந்தில் பதிலடி

மதுரை செல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்யும் நடிகர் செந்தில்

மதுரை

எய்ம்ஸ் மருத்துவமனையை அட்டைகளை அடுக்கி வைத்தா கட்ட முடியும். சிறிய வீடு கட்டுவதற்கே ஓராண்டுக்கு மேலாகும். எய்ம்ஸ் எவ்வளவு பெரிய மருத்துவமனை. அதைக் கட்டுவது சும்மாவா? எய்ம்ஸ் கண்டிப்பாக வரும்’ என நடிகர் செந்தில் பேசினார்.

மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் பா.சரவணனை ஆதரித்து செல்லூர் பகுதியில் நடிகர் செந்தில் இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றிப்பெற்றால் பிரதமர் மோடியின் திட்டங்கள் வீடு தேடி வரும். பாஜக 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். பாஜக வென்றால் சிலம்பு விளையாட்டு தேசிய விளையாட்டாக அறிவிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும். மாநில அரசு ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்பத் தலைவிக்கு ரூ.1500, இலவச வாஷிங்மெஷின் அறிவித்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக வரும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. கரோனா வந்ததால் பணிகள் தொடரவில்லை. இப்போது ஒரு செங்கலைக் காண்பித்து, இது தான் எய்ம்ஸ் மருத்துவமனை என்றும், அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்து வருகிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனையை அட்டைகளை வைத்தா கட்ட முடியும். சிறிய வீடு கட்டுவதற்கே ஓராண்டுக்கு மேலாகும். எவ்வளவு பெரிய மருத்துவமனை கட்டுவது சும்மாவா.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டம் மதுரை எய்ம்ஸ். நம்பிக்கையுடன் இருங்கள். எய்ம்ஸ் கண்டிப்பாக வரும்.

நான் சொல்வது தான் செல்லுபடியாகும். திமுக சொல்வது செல்லுபடியாகாது. நான் சொன்னது எல்லாம் வீடு தேடி வரும். பாஜக வெற்றி பெற்றால் தான் மச்சானுக்கு டெண்டர் கொடுப்பது, சித்தப்பாவுக்கு டெண்டர் கொடுப்பது எல்லாம் நிற்கும். இதனால் பாஜகவை வெற்றி பெற வையுங்கள் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x