விமானப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன? - மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய இணையமைச்சர் பதில்

டி.ஆர்.பாலு: கோப்புப்படம்
டி.ஆர்.பாலு: கோப்புப்படம்
Updated on
1 min read

விமானப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என, மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழு தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

டி.ஆர்.பாலு நேற்று (மார்ச் 25), மக்களவையில், விமானப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி-யிடம், "விமானப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த மத்திய அரசால் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன? டெல்லி, மும்பை போன்ற பெரு நகர விமான நிலையங்களை, நவீனமயமாக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், என்னென்ன நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன? வருகின்ற 2024-ம் ஆண்டுக்குள்ளாக இந்தியா மூன்றாவது பெரிய விமானச் சந்தையாக மாறும் வாய்ப்புகள் உள்ளதா?" என டி.ஆர்.பாலு விரிவான கேள்வியை எழுப்பினார்.

மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் மக்களவையில் அளித்த பதில்:

"பசுமை சார்ந்த விமான நிலையங்களை உருவாக்கவும், உடான் திட்டத்தின் கீழ், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தவும், அரசு - தனியார் பங்களிப்புத் திட்டத்தின் மூலம், விமானத் துறையின் முதலீட்டை அதிகப்படுத்தவும், பொது பராமரிப்பு சேவைகளுக்கு, சரக்கு மற்றும் சேவை வரிகளை ஐந்து விழுக்காடாகக் குறைத்தும் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை, கணிணி மயமாக்கியும், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு, விமான போக்குவரத்து சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஹர்தீப் சிங் பூரி: கோப்புப்படம்
ஹர்தீப் சிங் பூரி: கோப்புப்படம்

டெல்லி விமான நிலையத்தில், விமான பயணிகள் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், இந்திய விமான நிலைய ஆணையத்தால், கட்டுப்பாட்டு அறைகள் இயக்கபட்டு வருகின்றன. விமான ஓடு பாதைகளை நவீன மயமாக்கவும், நவீ மும்பை, நொய்டாவிற்கு அருகில் ஜீவார் போன்ற இடங்களில், புதிய நவீன விமான நிலையங்களை அமைத்தும், பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன".

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in