

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாமகவின் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக, நேற்று மாலை ராயப்பேட்டை பகுதியில், பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்த்தப்படும். இங்கு வேலைக்கு வரும் இளைஞர்கள் தங்க இலவச விடுதி வசதி செய்யப்படும். குடிசைகளில் வாழும் ஏழை மக்கள் நகருக்கு அப்பால் வெளியேற்றப்பட மாட்டார்கள்.
திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதிகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படும். சென்னை மக்களின் மத நல்லிணக்கம், பராம்பரி
யம் பாதுகாக்கப்படும். சென்னையின் மக்கள் தொகையை சவாலாக ஏற்று, திட்டமிட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவ
டிக்கை எடுக்கப்படும். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், போக்குவரத்து வசதியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாமக
சேர்ந்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. மீண்டும் பழனிசாமி முதல்வராவார். அவர் மீதுகுற்றச்சாட்டு இல்லை" என்றார்.