பிரச்சார வாகன அனுமதி வழங்குவதில் பாரபட்சமா? - விருத்தாசலம் தொகுதியில் சுயேச்சைகள் குமுறல்

விருத்தாசலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சுயேச்சை வேட்பாளர்.
விருத்தாசலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சுயேச்சை வேட்பாளர்.
Updated on
1 min read

விருத்தாசலம் தொகுதியில் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேர்தல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகசுயேச்சைகள் தங்கள் குமுறல்களை தெரிவிக்கின்றனர்.

விருத்தாசலம் தொகுதியில் 13 அரசியல் கட்சி வேட்பாளர்களும், 11 சுயேச்சைகளும் போட்டியிடு கின்றனர். இவற்றில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெற்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சுயேச்சைகள், இறுதிப்பட்டியல் வெளியான பிறகு தான் பிரச்சார வாகனங்களுக்கான அனுமதிகேட்டு விண்ணப்பம் அளித்துள் ளனர்.அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்யப்படுகிறது. அரசியல் கட்சியினர் வாகனங்களுக்கு விரைந்து அனுமதி அளிக்கப் படுகிறது. குறுகிய நாட்களே இருப்பதால் நாங்கள் தொகுதி முழுக்க எப்படி பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் எனசுயேச்சைகள் கேள்வி எழுப்பு கின்றனர்.

இதுதொடர்பாக விருத் தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டபோது, "எங்கள் அலுவலகத்தில் விண்ணப் பித்தவர்களின் வாகனங்களுக்கான அனுமதி வழங்கக் கோரி மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரைத்துள்ளோம். அவர்கள் தான் அனுமதி வழங்கவேண்டும்" என்றார்.

இதையடுத்து விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் வேல்முருகனிடம் கேட்டபோது, "இதுவரை 40 பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவண சான்றுகள் சரிவர இணைக்கப் படாமல் இருந்தால் அனுமதி வழங்கியிருக்க மாட்டோம்.

ஆவணங்கள் சரியாக வைத் திருந்தால் அரை மணி நேரத்தில் ஒப்புதல் வழங்கிவிடுவோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in