Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

பாஜக, என்ஆர் காங்., ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மிகப்பெரிய ஆபத்து: உழவர்கரை பிரச்சாரத்தில் திருமாவளவன் எச்சரிக்கை

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் உழவர்கரை தொகுதியில் விடு தலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அங்காளன் (எ) தேவ.பொழிலன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உழவர்கரை சமுதாய நலக்கூடம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரி அரசியல் எப்படி போய்கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்தது. புதுச்சேரி மாநிலத்தை பாஜக குறி வைத்துள் ளது. 5 ஆண்டுகாலம் நாராயணசாமிக்கு கடுமையான நெருக்க டியை கிரண்பேடி மூலமாக பாஜககொடுத்தது. அவரை திடீரென்று மாற்றிவிட்டு, தமிழிசையை பொறுப்பு ஆளுநராக நியமித் துள்ளது. தொடர்ச்சியாக எம்எல்ஏக் களை விலைக்கு வாங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை சதிவேலை செய்து கவிழ்த் துவிட்டது. எப்படிப்பட்ட அநாகரிக அரசியலையும் செய்வோம்; அதற்கு தயங்கவோ, வெட்கப்படவோ மாட்டோம் என்கிற அளவுக்கு அருவெறுப்பான அரசியல் செய்யக் கூடிய ஒரு கட்சி தான் பாஜக.

அவர்கள் ஒருவேலை தப்பித்தவறி ஆட்சிக்கு வரும் நிலை வந்தால் புதுச்சேரியை யாராளும் காப்பாற்ற முடியாது. அவ்வளவு மோசமான அரசியல் செய்யக்கூடிய பாஜகவுக்கு என்ஆர் காங்கிரஸூம், அதிமுகவும் துணைபோயுள்ளனர்.

மறைமுகமாக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைத் தாண்டி வெளிப்படையாகவே நாங்கள் புதுச்சேரியை கைப்பற்றுவோம் என்று பாஜக கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.

காங்கிரஸூக்கும் - என்ஆர் காங்கிரஸூக்கும், அதிமுகவுக்கும் - திமுகவுக்கும் போட்டியிருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் பாஜக என்கின்ற ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான கட்சி தமிழகம், புதுச்சேரியில் காலூன்றினால் என்னவாகும் என்பதை அனைவ ரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாஜக வடமாநிலங்களில் என்னென்ன அநீதிகளை செய்ததோ, அதையே தமிழகம், புதுச்சேரியில் செய்ய காத்திருக்கின்றனர். அதற்கு ஒருபோதும் நாம் இடம் கொடுத்து விடக்கூடாது.

எப்படியாவது ஆட்சி அதி காரத்துக்கு வந்துவிடவேண்டும் என்று சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர். பாஜக, என்ஆர் காங்கிரஸ் ஆட்சி இங்கே வந்துவிட்டால் புதுச்சேரிக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண் டும்.

எனவே புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற போராட காங் கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு இத்தொகுதியில் விசிக வெற்றி பெற வேண்டும்.

இக்கூட்டணியின் வெற்றிக்கு அனைத்து தொகுதிகளிலும், ஒருங் கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x