

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரி வித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனை ஆதரித்து, செங்கிப்பட்டியில் நேற்று அவர் பேசியது:
மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே நலத்திட்டங்களை பெற முடியும் என பிரச்சார கூட்டங்களில் முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். இது வினோதமாக உள்ளது. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பது தவறில்லை. ஆனால், அடிமையாக குறிப்பாக கொத்தடிமையாக இருக்கக்கூடாது. இனி புதிய மாவட்டம் உருவாக்கப்படாது என தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்த பழனிசாமி, தற்போது பழனி புதிய மாவட்டமாக உருவாக்கப் படும் என கூறுவது முரணாக உள்ளது. செல்லும் இடமெல்லாம் திமுக அழிந்து விடும் என கூறும் அவர், பாம்பின் வாயில் சிக்கிய தவளைபோல, பாஜகவிடம் சிக்கியுள்ள அதிமுக அழியப்போகிறது என்பதை உணர வேண்டும்.
அதிமுகவை மிரட்டி 20 தொகுதிகளைப் பெற்ற பாஜக, தான் போட்டியிடும் அனைத்து தொகுதி களிலும் டெபாசிட் இழக்கும். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் கட்சியாக திமுக உள்ளதால், வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் வேட் பாளரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.