தமிழக ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கை தந்த வெற்றி: நிதிஷ், லாலுவுக்கு வைகோ கடிதம்

தமிழக ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கை தந்த வெற்றி: நிதிஷ், லாலுவுக்கு வைகோ கடிதம்
Updated on
1 min read

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாத் ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான மதச்சார்பின்மையை பாதுகாக்கும் ஒளி விளக்காக உங்களின் வரலாற்றுப் புகழ்மிக்க தேர்தல் வெற்றி அமைந்ததற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஆர்எஸ்எஸ் அமைப்பால் இயக்கப்பட்ட இந்துத்துவா சக்திகளின் நாசகார முயற்சிகளுக்கு இத்தேர்தல் வெற்றி மரண அடியைத் தந்துள்ளது.

இந்த வெற்றி இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மூல பலமான மதச்சார்பின்மையை பாதுகாக்கும் கவசமாகவும், கேடயமாகவும் நீங்கள் வகுத்த அரசியல் வியூகம் அமைந்து விட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உங்கள் ஆகிய இருவருக்கும் என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in