காரைக்கால் மாவட்டத்தில் தபால் வாக்குளை சேகரிக்கும் பணி தொடக்கம்

தபால் வாக்குகளை சேகரிக்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட அதிகாரிகள்.
தபால் வாக்குகளை சேகரிக்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட அதிகாரிகள்.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டத்தில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி இன்று தொடங்கியது.

நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில், விருப்பமுள்ள 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் தபால் வாக்குகள் அளிக்க தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் 1,174 பேர் தபால் வாக்குகள் செலுத்த பதிவு செய்துள்ளனர். இவர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை பெறுவதற்கான பணி இன்று (மார்ச் 25) தொடங்கியது. மார்ச் 27-ம் தேதி வரை இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகளை சேகரிக்க 20 குழுக்களும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு நுண் பார்வையாளர், 2 வாக்குப் பதிவு அதிகாரிகள், ஒளிப்பதிவாளர், காவலர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தபால் வாக்குப் பதிவு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மேற்பார்வையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in