தஞ்சாவூர் கால்நடை ஆராய்ச்சிக் கல்லூரியில் 20 மாணவர்களுக்குக் கரோனா தொற்று

தஞ்சாவூர் கால்நடை ஆராய்ச்சிக் கல்லூரியில் 20 மாணவர்களுக்குக் கரோனா தொற்று
Updated on
1 min read

தஞ்சாவூர், ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சிக் கல்லூரியில் 20 மாணவர்களுக்குக் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு முதன்முதலாக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கரோனா தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதைத் தொடந்து மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இணைய வழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 13 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயின்ற மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என 190 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று (24-ம் தேதி) மாலை வரை 110 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.

இந்த நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை ஆராய்ச்சிக் கல்லூரியில் கடந்த 23-ம் தேதி 430 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் முடிவுகள் இன்று வந்துள்ளன. இதில் 20 மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து 20 பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in