

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
தமிழ்நாடு கேரளா, புதுச்சேரி மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் காங்கிரஸ்-திமுக- விசிக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க போவது யார் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மொத்த இடங்கள்: 30
என்ஆர் காங்கிரஸ் - பாஜக- அதிமுக கூட்டணி : 21 இடங்கள்
காங்கிரஸ் - திமுக கூட்டணி: 9 இடங்கள்
இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ஆர் காங்கிரஸ் - பாஜக- அதிமுக கூட்டணிக்கு குறைந்தபட்சம் 19 இடஙகளும், அதிபட்சமாக 23 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு குறைந்தபட்சம் 7 இடங்களும், அதிபட்சம்11 இடங்களும் கிடைக்கக்கூடும் என டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.