கரோனாவால் நிறுத்தப்பட்ட அந்த்யோதயா விரைவு ரயில் ஏப்.24 முதல் மீண்டும் இயக்கம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

கரோனாவால் நிறுத்தப்பட்ட அந்த்யோதயா விரைவு ரயில் ஏப்.24 முதல் மீண்டும் இயக்கம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

கரோனாவால் நிறுத்தப்பட்ட தாம்பரம்- நாகர்கோவில் இடையே யான முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில் ஏப்.24-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது.

கரோனா ஊரடங்கால் வழக்க மான பயணிகள் விரைவு ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இருப்பினும், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு 90 சதவீத ரயில்கள் சிறப்பு ரயில் களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களின் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் பயணிகள், சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர்.

எனவே, தாம்பரம் - நாகர்கோ வில் இடையே இயக்கப்படும் அந்த்யோதயா முன்பதிவு இல் லாத ரயில்களை இயக்க வேண் டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந் நிலையில், சென்னையில் இருந்து மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு அதிவிரைவு ரயில்களும், அந்த்யோதயா ரயில்களும் இயக்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறிய தாவது:

பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு சென்னை- மதுரை, கோவை, புதுச்சேரி- கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுதொடர்பான முழு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதேபோல, கரோனா ஊர டங்கால் நிறுத்தப்பட்டிருந்த தாம்பரம் - நாகர்கோவில் இடை யேயான முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில் வரும் ஏப்.24-ம் தேதி முதல் மீ்ண்டும் இயக்கப்படும். கரோனா அதிகரித்து வரும் சூழலிலும், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் கட்டாயமாக கரோனா முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளைப் பின்பற்ற வேண் டும். இவ்வாறு அவகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in