

திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.எம்.கருமாணிக்கம், பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி வாக்குச் சேகரித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட் பாளர் ஆர்.எம்.கருமாணிக்கம், கருமொழி, ஆதியாகுடி, ஓரிக்கோட்டை, புல்லாவயல்,சேந்தணி, கலியணி, கீழக்கோட்டை, மங்களக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். அவருக்கு பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை கொடுத்து ஆர்.எம்.கருமாணிக்கம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, திருவாடானை ஊராட்சி ஒன்றியத் தலைவர் முகம்மது முக்தார், திருவாடானை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.