

மதுரை, சிவகங்கை மாவட்டங் களில் முதல்வர் கே.பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தமிழக முதல்வர் கே.பழனிசாமி திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு மதுரை வந்தார்.
மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளார். அப்போது அவர் மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிமுக வேட்பாளர்கள், முக்கிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று காலை மதுரை கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஒத்தக்கடையில் பிரச் சாரத்தைத் தொடங்குகிறார்.
காலை 10 மணிக்கு மேலூர், 11 மணி- அலங்காநல்லூர், 12 மணி-செக்கானூரணி, பிற்பகல் 1 மணி-உசிலம்பட்டி செல்கிறார். அதன்பின் மதியம் மதுரை திரும் புகிறார். மதிய உணவுக்குப்பின் வி.வி.ராஜன்செல்லப்பாவை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் பிற்பகல் 3 மணிக்குப் பேசுகிறார். தொடர்ந்து பழங்காநத்தம்-4.30 மணி, ஆரப்பாளையம்-5.30 மணி, முனிச்சாலை-6 மணிக்குப் பேசுகிறார். பின்னர் காரைக்குடி செல்லும் முதல்வர், இரவு 8.30 மணிக்கு பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்துப் பேசுகிறார்.
நாளை காலை காரைக் குடியிலிருந்து புறப்படும் முதல் வர், திருப்பத்தூரில் காலை 9.30 மணிக்குப் பேசுகிறார்.
சிவகங்கை-10.15மணி, மானாமதுரை-11மணி, அருப்புக்கோட்டை-12மணி, விருதுநகர், சிவகாசி-4.30 மணி, வில்லிபுத்தூர்-5.30 மணி, ராஜ பாளையம்-6.30 மணி, சாத்தூர்-8 மணி, கோவில்பட்டி-9 மணிக்கு பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.