

தமிழினத் துரோகிகளையும், தீய சக்தியையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வேலூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அமமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வேலூர் - பெங்களூரு சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது:
தமிழின துரோக்கிகளையும், தீய சக்தியான திமுகவையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.
அனைவருக்கும் சமநீதி, சம உரிமை, ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் அமமுக கூட்டணி வேட்பாளர்களை பொதுமக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அமமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பெரும் திருப்புமுனை ஏற்படும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் அமமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.