

மதுரை மாவட்டத்தில் கூடுதல் வேட்பாளர்கள் போட்டியிடும் 3 தொகுதிகளுக்கு, மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கெனவே கடந்த 8ஆம் தேதி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
கடந்த திங்களன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 16ஐ தாண்டியுள்ளதால் அந்த 3 தொகுதிகளுக்கும் தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிறது.
அதனால், கூடுதலாக சோழவந்தான் தொகுதிக்கு 366 இயந்திரங்களும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 550 இயந்திரங்களும், திருமங்கலம் தொகுதிக்கு 483 வாக்குபதிவு இயந்திரங்களும் சுழற்சி முறையில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.