‘நான் பெறப்போகும் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி’ - குஷ்பு

பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, மார்டன் ஸ்கூல் சாலை பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.படம்: பு.க.பிரவீன்
பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, மார்டன் ஸ்கூல் சாலை பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

தேர்தலில் நான் பெறப்போகும் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றியாகவே கருதப்படும் என பாஜக வேட்பாளர் குஷ்பு பிரச்சாரத்தின்போது பேசினார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். அதன்படி, குஷ்பு தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கோபாலபுரம் பகுதியில் குஷ்பு நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவினருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. இதனால், தொகுதி முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கடந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான பல செயல்பாடுகளை திமுகவினர் தொடர்ந்து செய்துள்ளனர். ஆனால், பாஜகவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. நாட்டின் உயர்ந்த பதவியில் பெண்களை அமர்த்தி அழகு பார்க்கப்படுகிறார்கள். பெண்களுக்கான நலன் கல்வி உள்ளிட்ட துறைகளில் பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எனவே, பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றத்துக்காக தொகுதி மக்கள் எனக்கு வாக்கு அளிக்க வேண்டும். இந்த தேர்தலில் நான் பெறப்போகும் வெற்றி என்னுடையது மட்டுமில்லை. ஒட்டுமொத்த பெண்களின் வெற்றியாகவே கருதப்படும். இவ்வாறு குஷ்பு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in