பிரேமலதா மீதான விமர்சனத்தை திட்டமிட்டுத் தவிர்க்கும் பாமக

விருத்தாசலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
விருத்தாசலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் அமமுக - தேமுதிக கூட்டணியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா களம் காண்கிறார். அங்கு அவரை எதிர்த்து நிற்கும் பாமக வேட்பாளர் ஜி.கார்த்திக்கேயனை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

இருதலைவர்களும் திமுகவை கடுமையாக விமர்சித்தனர். மாறாக தினகரன் குறித்தோ, விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா குறித்தோ வாய் திறக்கவில்லை.

ராமதாஸ், பிரேமலதா குறித்து விமர்சிப்பதை கவனமாக தவிர்த்தார். இதுகுறித்து பாமகவினரிடம் கேட்டபோது, "பிரேமலதாவை விமர்சனம் செய்து அவருக்கு அனுதாப அலையை ஏற்படுத்தி விட வேண்டாம் என பாமக தலைமை அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.

கடந்த 2006 தேர்தலில் விஜயகாந்துக்கு எதிரான பாமக முன்வைத்த விமர்சனங்களே, அவருக்கு சாதகமாக அமைந்து விட்டதாம். எனவே இம்முறை மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்; பிரேமலதாவை விமர்சித்து அதன் மூலம் அவருக்கு ‘தனி மாஸ்’ உருவாகி விடக் கூடாது என்பதில் பாமக கவனத்துடன் இருக்கிறது. குறிப்பாக, பிரேமலதா வாக்கு சேகரிக்கும் கிராமங்களில் அமைதி காக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என பாமக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in