

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 ஆயிரம் ஏக்கர் நெற்பயிற்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் 470 கிமீ நீளத்துக்கான சாலைகளும் சேதமடைந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையின் தீவிரத் தால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் ஆறுகளில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் ஏரிகளின் கரைகள் உடைந்தததால், 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக் கின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாதாதல் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தலை மையிலான வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடயே வெள்ளநீரால் விளைநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து, மாவட்ட வேளாண் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். மேலும், விளை நிலங்கள் மற்றும் பயிர்கள் பாதிப்பு தொடர்பாக வேளாண் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப் பட்டது. இதை தொடர்ந்து பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த விவ சாயிகள் தொடர்ந்து சேத விவரங் களை அளித்து வருகின்றனர்.
இதன்படி 21 ஆயிரத்து 4 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், இளம் பயிர்களுக்கு யூரியா மற்றும் பொட்டாசியம் உரம் அளித்தால், தானாக சரியாகி விடும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநர் சீதாராமன் கூறிய தாவது: வெள்ளத்துக்கு 21 ஆயிரத்து 4 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. இதில், விதைத்து 35 நாட்கள் ஆன இளம் பயிர்கள் தண்ணீர் தேங்கியதால், பழுப்பு மற்றும் லேசான மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இவ்வாறு பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு, யூரியா மற்றும் பொட்டாசியம் அளித்தால், ஒருசில நாட்களில் சரியாகிவிடும்.
மேலும், கதிர் முதிரும் தண் மையில் பயிர்கள் சீர்படுத்துவ தென்பது கடினமான காரியம். அதனால், இவைகளை சேத கணக்கில் எடுத்துகொள்ளப்படும். இதனால், தற்போது மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நேற்றைய நிலவரப்படி 1,500 ஏக்கர் கணக்கில் எடுத்துகொள்ளப் பட்டுள்ளது. எனினும், முழு சேத விவரங்கள் மற்றும் இளம்பயிர்கள் சீரமைக்கும் முயற்சிகளின் முடிவு களில், சேத நிலவரங்கள் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சாலைகள் சேதம்
கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால், சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி யதில் காஞ்சிபுரம் - செங் கல்பட்டு, திருப்போரூர் - செங்கல் பட்டு, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சி புரம் சாலைகள் மற்றும் முக்கிய கிராம சாலைகள் என மொத்தம் 470 கிமீ சாலைகள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து, நெடுஞ் சாலைத்துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘லேசான பாதிப்பு உள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து வருகிறோம். பெரிய அளவில் சாலைகள் அடித்து செல்லப்பட்ட இடங்களில் புதிய சாலைகள் அமைக்க, அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது.
நிதி கிடைத்ததும் அந்த சாலை களும் சீரமைக்கப்படும்’ என கூறப்படுகிறது.