

தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் திண்டுக்கல் லியோனி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். குனியமுத்தூர், திருவள்ளுவர் நகர், திருமூர்த்தி நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளிலும், செல்வபுரம் பகுதிகளிலும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “பண்பாட்டை காப்பாற்ற ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர் கார்த்திகேய சிவசேனாபதி. குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதை ஆதரித்தது அதிமுக. இப்போது அதை எதிர்ப்போம் என்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் பாட்டை பாடி நமது வயிற்றில் அடித்து வருகிறார். அதற்கு ஆதரவு தருவது அதிமுக ஆட்சி. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகவும், சேனாபதி எம்எல்ஏவாகவும் ஆவது உறுதி"என்றார்.