தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது கூவம் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட அக்கா, தம்பி: ஒருவர் சடலமாக மீட்பு

தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது கூவம் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட அக்கா, தம்பி: ஒருவர் சடலமாக மீட்பு
Updated on
1 min read

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீரில் மூழ்கிய தரைப்பாலத்தில் நடந்து சென்ற அக்கா, தம்பி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தம்பி யின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரை தேடும்பணி நடக்கிறது.

சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் குமார் (55). இவர், தனது மகனின் திருமணத்துக்காக கடந்த சில நாட்களாக உறவினர் களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை திருவேற்காடு- செல்வகணபதி நகரில் வசிக்கும் தனது அக்கா விஜயலட்சுமி (57) வீட்டுக் குச் சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு புறப்பட்டார். அவருடன் விஜயலட்சுமியும் உறவி னருக்கு பத்திரிக்கை வைக்க வந்தார்.

இருவரும் திருவேற்காடு அருகே உள்ள சுந்தரசோழபுரம் காடுவெட்டி தரைப்பாலம் அருகே வந்தனர். அங்கு கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் மூழ்கிய நிலையில் இருந்த தரைப் பாலத்தில் ஆற்றைக் கடக்க நடந்து சென்றனர். அப்போது கால் தவறி விழுந்ததில் குமார் வெள்ளத்தில் சிக்கினார். அவரைக் காப்பாற்ற முயன்ற விஜய லட்சுமியும் வெள்ளத்தில் சிக்கி இருவரும் நீரில் அடித்துச் செல் லப்பட்டனர்.

தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் இருவரையும் தேடினர். நேற்று திருவேற்காடு கூவம் ஆற்றுப் பகுதியில் குமார் சடலமாக மீட்கப் பட்டார். தொடர்ந்து, விஜயலட்சு மியை தேடும் பணி நடந்து வருகிறது.

திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in