

விழுப்புரத்தில் நேற்று மாலை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தொகுதி அமமுக. வேட்பாளர் ஆர்.பாலசுந்தரம், செஞ்சி தொகுதி அமமுக வேட்பாளர் கவுதம்சாகர், மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சுந்தரேசன், வானூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் கணபதி, திண்டிவனம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சந்திரலேகா ஆகியோரை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.
அப்போது டி.டி.வி.தினகரன் பேசியதாவது:
ஜெயலலிதாவின் உண்மை யான தொண்டர்களாகிய நமக்கும்,‘தீயசக்தி’ என்று எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்ட தி.மு.க.வுக்கும், துரோக கம்பெனியான பழனிசாமி கம்பெனிக்கும் இடையே நடக்கிற தேர்தல் இது. மக்களையும், தொண்டர்களையும் நம்பி அமமுக தேர்தலில் நிற்கிறது. ஆனால் பழனிசாமி கம்பெனிகாந்தி நோட்டை நம்பியே தேர்த லில் நிற்கிறது.
நமது இலக்கு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்பதுதான். இந்த தொகுதியில் ரூ.200 கோடியை பதுக்கி வைத்துள்ளனர். இது யாருடைய பணம்? எல்லாம் மக்களின் வரிப்பணம். பணம் உங்களைத் தேடி வரும். அதை வாங்கிக்கொண்டு கதையைமுடித்து விடுங்கள். பழனிசாமி கம்பெனி ஆட்சிக்கு வரப்போவதில்லை. எப்படியாவது ஆட்சிக்குவந்து விட வேண்டும் என்றுஸ்டாலின் துடித்துக்கொண் டிருக்கிறார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து சமுதாய மக்களும் சமூக நீதியும், சம உரிமையும் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து டி.டி.வி. தினகரன் காணையில் விக்கிரவாண்டி தொகுதி அமமுக வேட்பாளர் அய்யனாரை ஆதரித்தும், திருக்கோவிலூரில் தேமுதிக வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்தும், பகண்டை கூட்டுசாலையில் ரிஷிவந்தியம் தொகுதி அமமுக வேட்பாளர் பிரபுசிவராஜை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.