திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கனிம வளங்கள் சுரண்டப்படும்: மதுரை கிழக்கு அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கனிம வளங்கள் சுரண்டப்படும்: மதுரை கிழக்கு அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

திமுக ஆட்சி வந்தால் கனிம வளங்கள் மீண்டும் சுரண்டப்படும் என்று மதுரை கிழக்குத் தொகுதி ஆர்.கோபாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டிப் பேசினார்.

மதுரை கிழக்குத் தொகுதி உட்பட்ட திருமோகூர் அம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்து பேசியதாவது

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மதுரை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்

இங்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மூர்த்தி கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் தொகுதி மக்களுக்கு எந்தத் திட்டமும் செய்யவில்லை. ஆனால் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது குறிப்பாக ஆயிரம் கோடியில் நத்தம் சாலையில் பறக்கும் பாலம், பாண்டிகோயில் அருகே உயர்மட்ட மேம்பாலங்கள், மூன்றுமாவடி இருந்து ஆனையூர் வரை 50 கோடியில் சாலைத் திட்டங்கள், 6 அம்மா மினி கிளினிக் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

இந்தத் தொகுதியில் கனிமவளங்கள் நிறைந்த தொகுதி ஆகும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கனிமவளங்கள் பறிபோகும் அதுமட்டுமல்லாது இன்றைக்கு முதல்வர் பல்வேறு திட்டங்களை வழங்கியது மட்டுமல்லாது இன்றைக்கு 163 தேர்தல் அறிக்கைகளை அறிவித்துள்ளார்.

ஆனால் திமுக தேர்தல் அறிக்கை என்பது வெற்றுக் காகிதம் ஆகும்

ஆகவே மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் அமர்ந்திடும் வண்ணம் இந்த கிழக்குத் தொகுதியில் சட்டப்பேரவை வேட்பாளராக போட்டியிடும் எனக்கு இரட்டை இலையில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in