

நாகூரில் வாக்காளரின் துணியைத் துவைத்து அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவன் வாக்குச் சேகரித்தார்.
நாகப்பட்டினம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரும், நாகை நகரச் செயலாளருமான வழக்கறிஞர் தங்க.கதிரவன் நேற்று (மார்ச் 22) தன் ஆதரவாளர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகூர் வண்ணான்குளத் தெருவில் வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு வீட்டின் வாசலில் ஒரு பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் வேட்பாளர் தங்க.கதிரவன் வாக்குச் சேகரித்தார். பின்னர், அந்தப் பெண்ணை விலகச் சொல்லிவிட்டு, அவரே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து துணியைத் தண்ணீரில் நனைத்துத் துவைக்கத் தொடங்கினார்.
இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்போது, அவரது ஆதரவாளர்கள் அவரை உற்சாகப்படுத்தி குரல் எழுப்பினர்.