விவசாயி என்றால் போராட்டம் நடத்திய விவசாயிகளைக் கண்டுகொள்ளாதது ஏன்?- முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் கேள்வி

விவசாயி என்றால் போராட்டம் நடத்திய விவசாயிகளைக் கண்டுகொள்ளாதது ஏன்?- முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் கேள்வி
Updated on
1 min read

தன்னை விவசாயி என்று அழைத்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எட்டுவழிச் சாலையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களைக் கண்டுகொள்ளாதது ஏன்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் பேசும்போது, “தன் பெயரில் நிலமே இல்லை எனக் கூறிக்கொள்பவர் தான் விவசாயி என்கிறார். அப்படி என்றால் எடப்பாடி பழனிசாமி போலி விவசாயியா?

தன்னை விவசாயி என்று அழைத்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எட்டுவழிச் சாலையை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களைக் கண்டுகொள்ளாதது ஏன்? உங்களிடமிருந்து வாங்கிய பணத்தை தேர்தல் நேரத்தில் உங்களிடமே தருவார்கள். உங்கள் பணம் உங்களிடத்தில்தான் வரும். பணத்தை வாங்கிக் கொண்டு கதையை முடித்துவிடுங்கள்” என்று பேசினார்.

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வர் ஆனவர் என்று டிடிவி தினகரன் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in