எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் சென்னை மூழ்கும்: சீமான் எச்சரிக்கை

எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் சென்னை மூழ்கும்: சீமான் எச்சரிக்கை
Updated on
1 min read

எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் தலைநகரான சென்னை மூழ்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருக்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “ சென்னையில் வெள்ளம் ஏற்படும்போது, கொசஸ்தலை ஆறு, பழவேற்காட்டில் உள்ள முகத்துவாரத்தில் நீர் சென்று கலக்கிறது. இந்த நிலையில் எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் இப்பகுதிகளில் மட்டும் பாதிப்பு ஏற்படாது. எண்ணூர் துறைமுக விரிவாக்கம் செய்தால் தலைநகர் சென்னை மூழ்கும். மேலும், தனியார் முதலாளிகளுக்கு மீனவர்கள் நலனில் அக்கறை இல்லை.’’ எனக் கூறினார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in