அதிமுக, பாஜகவினர் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறக் கூடாது: ஸ்டாலின்

அதிமுக, பாஜகவினர் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறக் கூடாது: ஸ்டாலின்
Updated on
1 min read

அதிமுக, பாஜகவினர் தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறக் கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர்கள் ஸ்டாலின் வடசென்னையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசும்போது, “ மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசிடம் அடக்கு வைத்து தமிழகத்தின் கரும்புள்ளியாக பழனிசாமி திகழ்கிறார். மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை.

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வெல்லக் கூடாது. ஆனால் அதிமுகவில் ஒருவர் வெற்றி பெற்றால் கூட அது பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றதை போன்றது ஆகும்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் ஒருவர் வெற்றி பெற்றார். அவரும் அதிமுகவாக செயல்படவில்லை. பாஜகவுக்காக செயல்பட்டார். அவர் யார் என்பது உங்களுக்கே தெரியும். ஓபிஎஸ் மகன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நெருக்கடி நிலையை எதிர்த்து ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தது உட்பட பல்வேறு போராட்டங்களைக் கொண்ட அரைநூற்றாண்டு தியாக வரலாறு என்னுடையது, பழனிசாமியின் வரலாறு அவமானகரமானது என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in