Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

திட்டமிட்டபடி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்; தமிழக வாக்காளர் எண்ணிக்கை 6.29 கோடியாக அதிகரித்தது: மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 29 லட்சத்து 43,512 ஆக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரி வித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹு கூறியதாவது:

4,512 மனுக்கள் ஏற்பு

தமிழகத்தில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்பு மனுக்களில், 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மொத்த மனுக்களில் 3 மனுக்கள் மூன்றாம் பாலினத்தவர் அளித்த மனுக்களாகும். கடந்த மார்ச் 9-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க புதிய விண் ணப்பங்கள் பெறப்பட்டன. ஏற் கெனவே, தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 21 லட்சமாக இருந்தது. தற்போது, 3 கோடியே 9 லட்சத்து 95,440 ஆண், 3 கோடியே 19 லட்சத்து 40,880 பெண், 7,192 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 29 லட்சத்து 43,512 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் ரூ.83.99 கோடி ரொக்கப்பணம், ரூ.1.70 கோடி மதிப்பு மதுபானம், ரூ.57 லட்சம் மதிப்பு போதை பொருட்கள், ரூ.130.51 கோடி மதிப்பு தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், ரூ.14.36 கோடி மதிப்பு இதர பொருட்கள் என மொத்தம் ரூ. 231.63 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

சிவிஜில் செயலியை வாக்காளர்கள் அதிகளவில் பயன்படுத்தி, புகார் அளிக் கலாம். பணம் பட்டுவாடா, மதுபான விற்பனை உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து வீடியோ, புகைப்படம் வாயி லாக புகார் அளிக்கலாம். இதுவரை சிவிஜில் செயலி மூலம் 1,971 புகார் கள் வந்துள்ளன. இதில், 1,368 புகார்கள் சரியானவை என்று கண்டறியப் பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், கரூர்- 437, கோயம்புத்தூர்- 323, சென்னை -112 புகார்கள் வந்துள்ளன. இவற்றின் மீது தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், நடத்தை விதிகளை மீறியதாக 2,122 புகார்கள் வந்துள்ளன. அதில், முக்கியமான விதிகளை மீறி போஸ்டர், பேனர் வைத்ததாக அதிகளவில் புகார்கள் வந்து வழக்கு பதிவு செய்துள்ளோம்.

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களுக்கு 778 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 8,158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை சார்பில் 515 சோத னைச் சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற 18,712 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இதில், 1 லட்சத்து 49,567 பேரும் 4.81 லட்சம் மாற்றுத்திறனாளிகளில் 45,397 பேரும் தபால் வாக்குக்கான 12டி படிவங் களை அளித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் விழிப்புணர்வு, பிரச்சார விளம்பரங்களுக்கு நடத்தை விதிகள் அடிப்படையில் 63 சான்றுகள் அளித்துள்ளோம்.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் 3 கட்டங்களாக விளம்பரம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு உள்ளூர் பத்திரிகை, ஒரு தேசிய பத்திரிகையில் விளம்பரம் வெளியிட வேண்டும். குறிப்பாக தேசிய பத்திரிகை 75 ஆயிரம் பிரதிகள், உள்ளூர் பத்திரிகை 25 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகக் கூடியவையாக இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே 21 லட்சத்து 39 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு விரைவு தபால் மூலம் புதிய வாக் காளர் அடையாள அட்டைகள் அனுப் பப்பட்டுள்ளன. தொடர்ந்து பிப்.28-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப் பங்களின்படி, 1.52 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு அடுத்த ஒரு சில தினங்களுக்குள் தபால்கள் அனுப்பி முடிக்கப்படும். அதன்பின், பெறப்பட்ட 1.50 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு வரும் மார்ச் 30-க்குள்ளும் அனுப்பி வைக்கப்படும்.

‘இ-எபிக்’ பதிவிறக்கம்

எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு வேளை வராவிட்டால், ‘இ-எபிக்’ பதிவிறக்கம் செய்து, அதை ஆவண மாக பயன்படுத்தி வாக்களிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் கள்:

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான புகார்கள் குறித்து..?

இதுவரை ஒரு புகார் வந்துள்ளது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வர்கள் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியுமா?

ஏற்கெனவே கடந்த மார்ச் 16-ம் தேதி வரை 12டி படிவம் அளிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தெரி வித்து, வாக்குச்சாவடிகளில் சென்று கடைசி ஒரு மணி நேரத்தில் வாக் களிக்கலாம். அப்போது வாக்காளர், வாக்குச்சாவடியில் உள்ள அலு வலர்கள் அனைவரும் முழு உடல் கவசம் அணிந்திருக்க அறிவறுத்தப் பட்டுள்ளது.

கரோனா தொற்று அதிகரிப்பதால் தேர்தல் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதா?

தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் சுகாதாரத் துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அவர்கள் அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் வேட்பாளர்களும் வாக்காளர்களும் பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம். இதுதவிர தேர்தல் ஆணையமும் கள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது யாரும் முகக்கவசம் அணிவ தில்லையே?

முகக்கவசம் அணிவது கண்காணிக் கப்படுகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தேர்தல் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதா?

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, வாக்களிக்க வேண்டி யதன் அவசியம் குறித்து பிரபுதேவா, மாதவன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் நடித்த 20 வீடியோக்களை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x