

தமிழகத்தில் மழைக்கு பலியா னோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழிந்துள்ளன. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். 25 ஆயிரம் வீடுகள் முழுமையாகவும், 50 ஆயிரம் வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மாடுகள், ஆடுகள், கோழிகள் ஆயிரக்கணக் கில் இறந்துள்ளன. 29 ஏரிகள் உடைந்துள்ளன. சுமார் ரூ.1,000 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், முழு மையாக இடிந்த வீடுகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 15 ஆயிரம், இறந்த மாடு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம், ஆடு, பன்றிக்கு தலா ரூ.10 ஆயிரம், கோழிக்கு ரூ.500 உடனடியாக வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்குவதோடு மத்திய அரசின் நிதியை பெற வேண்டும் என்றார்.
மயிலாப்பூர் வள்ளீஸ்வரன் தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.