பண்ருட்டியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக காட்டுவேன்: வேல்முருகன் உறுதி

மேல்பட்டாம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மேல்பட்டாம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
Updated on
1 min read

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல் முருகன் பண்ருட்டித் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த 3 தினங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக, காங்கிரஸ்,விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் புடைசூழ நேற்று மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் வேல்முருகன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் இல்லை. தன்னை மீண்டும் தேர்வு செய்யும்பட்சத்தில் கிராமச் சாலைகளையும், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்" என்று உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in