

ஒவ்வொரு தொகுதியில் வெற்றிபெற்றால் தான் திமுக ஆட்சியை பிடிக்க முடியும் என்று சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில் முன் னாள் அமைச்சர் எம்ஆர்கே.பனனீர்செல்வம் பேசினார்.
சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்கர்ம முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திமுககூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல்ரகுமானை அறிமுகப்படுத்தி பேசியது:
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கத்தினர் 10 தீர்மானம் கொடுத்ததில் 3 தீர்மானத்தை திமுக தலைவர் . ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். மேலும் 7 தீர்மானங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். ஜாதி வேறுபாடு இல்லாமல் திமுகவினர் பழகி வருகிறோம். 10 ஆண்டுகளாக ஆட்சியை மாற்ற போராடி வருகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். ஆகவே வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும். தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்தே முஸ்லிம் சகோதரர்களுடன் அன்பாக பழகி வருகிறோம். உங்களில் ஒருவனாக பேசுகிறேன். `பாய்’ என்றால் சகோதரன். ஆகவே சகோதரனை வெற்றி அடைய வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.