

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் து.குப்புராமை ஆதரித்து, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் திருப்புல்லாணியில் நேற்று பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிபெறும். இக்கூட்டணியின் வெற்றியால் மட்டுமே தமிழகம் தொடர்ந்து வளர்ச்சியடையும். தேசிய வளர்ச்சிக்கும், நலனுக்கும் எப்போதும் தனது தியாகத்தை அளிப்பவர்களாகவே பாஜக தொண்டர்கள் உள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் 2-ஜி ஊழல் மக்களால் அதிகம் பேசப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டு நலத்திட்டங்கள் எண்ணற்றவையாக இருப்பதால் அவற்றை நினைவில் கொள்ளவே சிரமமாக உள்ளது என்றார்.
முன்னதாக ராமநாதபுரம் வந்த இல.கணேசன், அதிமுக முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜாவை அவரது வீட்டில் சந்தித்து ஆலோ சனை செய்தார். அப்போது பாஜக வேட்பாளர் து.குப்புராம், பாஜக மாவட்டத் தலைவர் கே.முரளிதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.