

தனலெட்சுமி சீனிவாசன் குழும மருத்துவமனைகளில் மண்ணச் சநல்லூர் தொகுதி மக்களுக்கு அனைத்து விதமான அறுவை சிகிச்சைகள், அனைத்து நோய் களுக்குமான உயர்தர மருத்துவம் இலவசமாக அளிக்கப்படும் என திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச் சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் நேற்று நொச்சியம், மான்பிடிமங்கலம், திருவாசி, சிலையாத்தி, கிளியநல்லூர், துறையூர், திருப்பைஞ்ஞீலி, மேல்பத்து, பாண்டியபுரம், சுனை புகநல்லூர், நெய்வேலி, செட்டி மங்களம், குருவம்பட்டி, காட்டுவீடு, சோழங்கநல்லூர், ஏரிக்கரை, ராம கிரிப்பட்டி, வாத்தலை, கரியமா ணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
என்னை வெற்றி பெறச் செய்தால், இத்தொகுதிலுள்ள மக்களின் பிரச்சினைகள், தேவை களுக்கு நிச்சயம் தீர்வு காண்பேன்.
குறிப்பாக, மண்ணச்சநல்லூரி லுள்ள அரிசி ஆலைகளுக்கு மும்முனை மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும். மண்ணச்சநல்லூரில் புதிய பேருந்து நிலையம் அமைப் பதுடன், அங்கிருந்து தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும். புதை சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
தொகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை ஆழப்படுத்தி நீராதாரத்தைப் பெருக்க நடவ டிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படுத் தப்படும். தேவையான இடங் களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். மகளிர் வேலை வாய்ப்புக்கான திட்டங்கள் கொண்டு வரப்படும். சிறு மற்றும் குறு தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.
மேலும் தனலெட்சுமி சீனிவாசன் குழும மருத்துவமனைகளில் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு இதயம், சிறுநீரகம் உட்பட அனைத்து விதமான அறுவை சிகிச்சைகள், அனைத்து நோய்களுக்குமான உயர்தர மருத்துவம் அதிநவீன மருத்துவக் கருவிகள் மூலம் இலவசமாக அளிக்கப்படும் என்றார். திமுக வேட்பாளரின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இத்தொகுதி வேட்பாளர் எஸ்.கதிரவன், தனலெட்சுமி சீனிவாசன் குழுமத்தின் தலைவர் சீனிவாசனின் மகன் என்பதும், இக்குழுமத்தின் துணைத் தலைவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.