கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்

கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்
Updated on
1 min read

கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகம் மறுத்து வருகிறது. மேகேதாட்டுவில் இரு தடுப்பணை களை கட்டவும் கர்நாடகம் முயற் சித்து வருகிறது. இதனால் தமிழகத் தில் காவிரி டெல்டா மாவட்டங் களில் விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத் துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழு அமைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in