

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உமர் பாரூக் என்பவர் போட்டியிடுகிறார்.
இதையொட்டி, ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ கட்சி பிரமுகர் முகமது பாஷா ஜிலான் என்பவர் வாக்கு சேகரிப்புக்காக அனுமதி கேட்டிருந்தார். ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி அதற்கான அனுமதியை வழங்கினார்.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரிப்பில் அக்கட்சியின் கொடியேந்திக் கொண்டு வாக்கு சேகரிப்பில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்.
இதுகுறித்து ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பாபு, ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் முகமது பாஷா ஜிலான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.