ராஜபாளையத்தில் களம் இறங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மஞ்சள் படை

ராஜபாளையம்  தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி. உடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் மஞ்சள் படையினர்.
ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி. உடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் மஞ்சள் படையினர்.
Updated on
1 min read

விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த இருமுறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

அரசியல்வாதிகள் எப்போதும் வெள்ளை வேஷ்டி, சட்டைதான் அணிவர். 2019-ல்சாத்தூரில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கே.டி. ராஜேந்திர பாலாஜி மஞ்சள் நிற சட்டைக்கு மாறினார். அவர் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களும், கட்சியில் மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம், கிளை மற்றும் அதிமுகவின் துணை நிர்வாகிகள் என அனைவரும் மஞ்சள் நிற சட்டை அணிந்து வலம் வருகின்றனர்.

அதிமுகவின் கொள்கைளையும், பிரச்சாரங்களையும் வாக்காளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் துடிப்பான இளைஞர்களைக் கொண்ட ஐ.டி. பிரிவும் முழு வேகத்துடன் களம் இறங்கி செயல்படுகிறது. இக்குழு கே.டி.ஆர்.-ன் எல்லோ ஆர்மி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அன்றாடப் பிரச்சாரம், அறிவிப்புகள், வாக்குறுதிகள், சந்திக்கும் தலைவர்கள் என அனைத்துத் தகவல்களையும் வாக்காளர்களுக்கு குறிப்பாக இளம் வாக்காளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் கே.டி.ஆர்.-ன் எல்லோ ஆர்மி குரூப் பெயரில் முகநூல், வாட்ஸ்-ஆப், ட்விட்டர், டெலிகிராம் என அனைத்து தகவல் தொடர்பு சமூக வளைதளங்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

மாவட்ட அளவில் மட்டுமின்றி, தொகுதி அளவிலும், நகரம், வட்டாரம், ஒன்றியம், கிளை, ஊராட்சி, வார்டு என தனித்தனியாக குழுக்கள் தொடங்கப்பட்டு அதில், அன்றாட தகவல்கள், அதிமுகவின் பிரச்சாரங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதில், வாக்காளர்கள் பதிவிடும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வாக்குறுதிகளும் அளிக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in