

தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 26-ம்தேதி முதல் 10 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். லேசான தொற்று என்பதால், அடுத்த சில நாட்களில் குணமடைந்து விடுவார் என கூறப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவுள்ளதால், அவர் அந்த தொகுதியில் மட்டும் முழு கவனமும் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் அக்கட்சியின் துணை செயலர் எல்.கே.சுதீஷ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, வரும் 26-ம் தேதி திருத்தணியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதையடுத்து, தொடர்ந்து 27-ல் சென்னை தெற்கு, செங்கல்பட்டு, 28-ல் திருவண்ணாமலை, தருமபுரி, 29-ல் மேட்டூர், சேலம், 30-ல் திண்டுக்கல், கோவை, மதுரை, 31-ல் தூத்துக்குடி, விருதுநகர், ஏப்.1-ல் தஞ்சாவூர், புதுக்கோட்டை, 2-ல் கரூர், பெரம்பலூர், 3-ல் விருத்தாசலம், பண்ருட்டி, 4-ம் தேதி கள்ளக்குறிச்சி, கடலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.