காலணி, ‘விக்’கில் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 5.55 கிலோ தங்கம் பறிமுதல்

தலையில் பொருத்திக்கொள்ளும் ‘விக்’கில் தங்கம் எப்படி மறைத்து வைக்கப்பட்டிருந் தது என்பதை காட்டும் அதிகாரி.
தலையில் பொருத்திக்கொள்ளும் ‘விக்’கில் தங்கம் எப்படி மறைத்து வைக்கப்பட்டிருந் தது என்பதை காட்டும் அதிகாரி.
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் 5.55 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது ராமநாதபுரம் அக்பர் அலி (39), சென்னை உசைன் (26) ஆகியோர் அணிந்திருந்த ‘விக்’கை சோதனை செய்தபோது, 595 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதே விமானத்தில் வந்த திருச்சி பாலு கணேசன் (42) என்பவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 622 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். துபாயில் இருந்து வந்த விழுப்புரம் அன்பழகன் (24) என்பவர் ஷூ சாக்ஸில் மறைத்து வைத்திருந்த 1.33 கிலோ தங்கத்தை கைப்பற்றியஅதிகாரிகள், அவரையும் தங்கத்தை பெற வந்திருந்த சென்னைஅன்சாரி (26) என்பவரையும் கைது செய்தனர்.

துபாயில் இருந்து வந்த ராமநாதபுரம் சையது (22), சேலம் சந்தோஷ், சென்னை அப்துல்லா ஆகியோர் ‘விக்’கில் மறைத்து வைத்திருந்த 2.08 கிலோதங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரையும் கைதுசெய்தனர். விமானத்தில் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 933 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்ஜா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த 4 பேரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் ‘விக்’கில் மறைத்து வைத்திருந்த ரூ.24.06 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in