

அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் நேற்று மதுரைக்கு வந்தார். அவரிடம் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக, அமமுகவில் இணைவது அதிமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்குமா என்று அவரிடம் கேட்டபோது இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பதிலளித்தார்.
உங்களின் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் அதிமுகவில் இருந்து விலகியுள்ளாரே என்று கேட்டபோது, அதிமுக என்பது மிகப்பெரிய ஆலமரம், இதில் இருந்து யார் சென்றாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.