

அதிமுக ஆட்சியில் ஏராளமான நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்று அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து கீழப்பூங்குடியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இப்பகுதிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, கோயிலுக்கு சாலை வசதி, சமுதாயக் கூடம், பள்ளிக்கூடம் கொண்டு வந்துள்ளோம். இத்தனை நலத் திட்டங்களை வேறு எந்த அரசாவது உங்களுக்குச் செய்ததா? இதையெல்லாம் பழனிசாமி அரசு தான் செய்துள்ளது. பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தார். மேலும் கரோனா காலத்தில் எந்தக் கட்சியினராவது 5 கிலோ அரிசி கொடுத்தார்களா?. அந்த சமயத்தில் யாராவது உங் களைப் பார்க்க வந்தார்களா?. அவர்கள் தற்போது வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்கள் தேவைக்கு மட்டுமே வருகிறார்கள். ஆனால் நாங்கள் மட்டுமே உங்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத் திருக்கிறோம். கூட்டுறவு பயிர்க் கடன், மகளிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம் என்று பேசினார்.