

போடி தொகுதிக்குட்பட்ட அரண் மனைப்புதூர் முல்லைநகர் பகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக ஆட்சி அமைந்தவுடன் குடிநீர், சாக்கடை, பஸ் நிறுத்தம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். விவசாயிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி, ஆட்டோ வாங்குபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம், கல்விக் கடன் தள்ளுபடி உட்பட ஏராளமான திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் சிரமங்கள் அனைத்தும் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து கோட்டைப் பட்டி, வீருசின்னம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.