திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளருடன் இளைஞர்கள் செல்பி
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்.பாண்டி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், ‘வேட்பாளருடன் ஒரு செல்பி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞர்கள் வேட்பாளர் என்.பாண்டியின் முகஉருவத்தை முகமூடிபோல் அணிந்து வேட்பாளருடன் தனித்தனியாக செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் குழுவாக வேட்பாளருடன் செல்பி எடுத்தனர்.
தொடர்ந்து செல்லாண்டி யம்மன் கோயில் தெருவில் வீடு வீடாகச்சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தனர். வேட் பாளருடன் செல்பி நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் முகேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
