

கொழும்பு, துபாயில் இருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப் பட்டு நிலைமை சீரானபின் தாமதமாக தரையிறங்கின.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உட்பட தமிழகம் முழுவ தும் கனமழை பெய்து வருகிறது. மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. ஜிஎஸ்டி சாலை, அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் பெய்து வரும் மழையால் மோசமான வானி லை நிலவுகிறது. இதனால் விமான சேவைகளும் பாதிக்கப் பட்டுள்ளன. கொழும்பில் இருந்து 67 பயணிகளுடனும் மற்றும் துபாயில் இருந்து 294 பயணிகளுடன் நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்த விமானங்கள் மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து, 2 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.இதனால் விமான பயணிகள் அவதிக்குள் ளாகினர். அதன்பின் வானிலை சரியானதும் அதிகாலை 4.30 மணிக்கு பிறகு பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.