விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் காங்கயத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெற முடிவு

விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் காங்கயத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெற முடிவு
Updated on
1 min read

பிஏபி கடைமடை விவசாயிகளின் கோரிக்கையை பொதுப்பணித் துறை ஏற்க தொடங்கியதையடுத்து, காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்த 23 விவசாயிகள், போட்டியிடும் முடிவை திரும்பப்பெறமுடிவு செய்துள்ளனர்.

பிஏபி பாசனத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீர் திறக்கப்படாததை சுட்டிக்காட்டும் வகையில், காங்கயம் தொகுதியில் போட்டியிட விவசாயிகள் முடிவெடுத்திருந்தனர். அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டிக்கும் வகையில், பிஏபி கடைமடை பாசன விவசாயிகள் சார்பில் வெள்ளகோவில் ஒன்றியம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வி.கே.ராமசாமி (64), கடந்த 16-ம் தேதி மனு தாக்கல் செய்தார். காங்கயத்தில் 23 விவசாயிகள் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில் பொதுப்பணித்துறை பணிகளை தொடங்கியுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், தேர்தலில் போட்டியிடும் முடிவை விவசாயிகள் திரும்பப்பெற உள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயி ஒருவர்கூறும்போது, "எங்கள் சார்பில் 7 கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. முதல்கட்டமாக பிஏபி வாய்க்காலில் வரும் நீரின்வேகம்,வாய்க்கால் அளவீடு உள்ளிட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால், தேர்தலில் போட்டியிடும் முடிவை திரும்பப் பெற உள்ளோம். எந்த கட்சிக்கும் ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. வாக்களிப்பது அவரவர் விருப்பம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in