

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் என்.பி.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகை நீலா மேல வடம்போக்கி தெருவில் காப்பீடு நிறுவன கிளை அலுவலகத்தின் முன்பு ஒரு குப்பைத் தொட்டி உள்ளது.
இந்தக் குப்பைத் தொட்டியில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட கரோனா முழுஉடல் பாதுகாப்புக் கவச உடைகள், கையுறைகள், முகக்கவசங்கள் போன்றவை போடப்பட்டுள்ளன. அவை காற்றில் பறந்து, சாலை முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
நாடு முழுவதும் 2-வது சுற்று கரோனா அலை வீசுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துவரும் நிலையில், இதுபோன்று பயன்படுத்தப்பட்ட கரோனா கவச உடைகளை பாதுகாப்பின்றி வீசியவர்கள் குறித்து ஆட்சியர் விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.