Published : 27 Nov 2015 09:29 AM
Last Updated : 27 Nov 2015 09:29 AM

இரண்டு ஆண்டுகள் நிறைவு: ‘தி இந்து’ செய்திகள் ஏற்படுத்திய தாக்கம்

உடைந்த ஏரிகள் சீரமைப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரத்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், வையாவூர், நத்தப் பேட்டை, அவளூர், ஊத்துக்காடு போன்ற ஏரிகளின் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறியதால், காஞ்சி புரம் மற்றும் வாலாஜாபாத் வட்டங் களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மிதந்தன. ஆனால், ஏரியின் கரை உடைப்புகள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் அதிகாரிகள் மறைத்தனர். இந்நிலை யில், உடைந்த ஏரிகளின் நிலை குறித்தும் அவை உடைவதற்கான அறிகுறிகள் குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தும் அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியது தொடர்பாக ‘தி இந்து’வில் கடந்த 14-ம் தேதி விரிவாக செய்தி வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் கஜலட் சுமியின் நேரடி கவனத்துக்கு கொண்டுசென்றது. இதையடுத்து, பெருமளவில் உடைந்த ஊத்துக் காடு ஏரியை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மணல் மூட்டைகளை கொண்டு கரையை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். இதனால், சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதையடுத்து,ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள உதவிய ‘தி இந்து’வுக்கு ஊத்துக்காடு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மின்சார ரயிலை மெட்ரோ ரயிலுடன் இணைக்க ஆலோசனை

கடந்த 2006-ம் ஆண்டு பாடி மேம்பாலம் கட்டும் பணி தொடங் கியபோது, அதற்கு தூண்கள் அமைப்பது உள்ளிட்ட பணிக ளுக்காக அண்ணாநகர், பாடி ஆகிய 2 ரயில் நிலையங்களும் திடீரென மூடப்பட்டன. அதன் பிறகு இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை. பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதால் இந்த ரயில்கள் நிறுத் தப்பட்டதாக ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அப்பகுதிகளில் போக்கு வரத்து தேவை அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் மின்சார ரயில்களை இயக்க வேண்டுமென கூறி வாசகர்கள் “உங்கள் குரல்” மூலம் கோரிக்கை வைத்த னர். இதையடுத்து, சம்பவ இடத் துக்கு சென்று, ரயில்வே அதிகாரி கள் கருத்து கேட்டனர். இதுதொடர் பான செய்தி கடந்த ஏப்ரல் 13-ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து, மீண்டும் ரயில் சேவை தொடங்குவது பற்றி ரயில்வேத்துறை ஆலோ சனை நடத்தி வருகிறது. மேலும், திருமங்கலம், மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருப்பதால், மின்சார ரயில்சேவை தொடங் கினால், மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க தயாராக இருப்பதாக மெட்ரோ ரயில்வே நிறுவனம் தெரி வித்துள்ளது.

`உங்கள் குரல்' செய்தியால் மீண்டும் பேருந்து இயக்கம்

தியாகராயர் நகரிலிருந்து எழும்பூர் வழியாக திருவொற்றியூர் வரை இயக்கப்பட்டுவந்த 10ஏ பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது என்றும், அந்தப் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த எத்திராஜன் என்ற வாசகர் “தி இந்து” உங்கள் குரல் மூலம் கூறியிருந்தார். அவரது கோரிக்கை தொடர்பாக 4-9-2015-ல் “தி இந்து”வில் செய்தி வெளியானது. அதன் பயனாக தற்போது மீண்டும் 10ஏ பேருந்துகள் கடந்த ஒருமாத காலமாக இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அந்த வாசகர், செய்தி வெளியிட்ட “தி இந்து” நாளிதழுக்கும், பேருந்தை மீண்டும் இயக்கிய மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கும் நன்றி கூறியுள்ளார்.

தேர்வில் பங்கேற்ற மாணவர்கள்

செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், 10-ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்காக 9-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத அனுமதிக்காமல் பள்ளியிலிருந்து வெளியேற்றுவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழ் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றது. மேலும், இதுதொடர்பாக கடந்த ஜூன் 27-ல் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாவட்டக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மேற்கூறிய பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9 மாணவர்கள் வெளியேற்றப்பட்டது தெரிந்தது. இவர்களுக்கு, கல்வித்துறை அதிகாரிகள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டதால், பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சாலை சீரமைப்பில் மோசடி

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் போதிய சாலை வசதி செய்யப் படவில்லை. இந்நிலையில், பொதுமக்கள் விடுத்த தொடர் கோரிக் கையையடுத்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள 60 அடி அகல பிரதான சாலை தார் சாலையாக செப்பனிடப்பட்டது. இச்சாலை யின் முழு நீளமும் சீரமைக்கப்படவில்லை. பகுதி அளவு மட்டுமே சீரமைக்கப்பட்டது. இதுகுறித்து, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் கடந்த ஜூலை 27-ம் தேதி படத்துடன் விரிவாக செய்தி வெளியிட்டது. இதையடுத்து, 60 அடி சாலை முழுவதும் தார் சாலையாக செப்பனிடப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

போலி டாக்டர்கள் கைது

தமிழகத்தில் போலி டாக்டர்கள் அதிகரித்துள்ளதாகவும், அவர்களது தவறுகளால் உண்மையான டாக் டர்கள் பாதிக்கப்படுவதாகவும் தமிழ் நாடு மருத்துவக் கவுன்சில் தெரி வித்திருந்தது. இந்த செய்தி ’தி இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியானது. இதையடுத்து போலி டாக்டர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைக்கப் பட்டன. போலி டாக்டர்கள் கைது நடவ டிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதுவரை தமிழகம் முழுவதும் ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் மீதும் கவனம்

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் பன்றிக்காய்ச்சலை தடுப்பதிலேயே முழு கவனம் செலுத்தி வந்தனர். இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 1,012 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த செய்தி ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியானது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி தமிழக சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பன்றிக்காய்ச்சலுடன் சேர்த்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர். தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்தனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு அலோபதி மருந்துடன் சித்த மருந்தான நிலவேம்பு குடிநீர் கசாயம் கொடுக்கத் தொடங்கினர். இதன் மூலம் தமிழகத்தில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்தது.

7 ஆண்டுகளாக நீடித்த மண்சாலை தார் சாலையாக உருமாறியது

திருவள்ளூர் மாவட்டம், வில்லி வாக்கம் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்டது அடையாளம்பட்டு ஊராட்சி. சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு மிக அருகே உள்ள அடையாளம்பட்டுவின் பிர தான சாலை பாடசாலை ரோடு.

ஏழு ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக போடப்படாமல் இருந்த இந்த தார் சாலை, மண் சாலை யாக உருமாறி, ஆண்டுகணக்கில் நீடித்தது. சிறு மழை பெய்தாலே சிறு சிறு குளமாக மாறிய அடையாளம்பட்டு- பாடசாலை ரோட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

இதுகுறித்து, ’’சென்னை அருகே 7 ஆண்டுகளாக சீரமைக் கப்படாத சாலை’’ என்ற தலைப் பில், 2015, ஜூன் 10-ம் தேதியிட்ட ’தி இந்து’ வில் புகைப்படத் துடன் விரிவாக செய்தி வெளி யிட்டிருந்தோம். அதன் விளை வாக 20 நாட்களில், அடை யாளம்பட்டு பிரதான சாலையை அதிகாரிகள் புதிய தார் சாலை யாக மாற்றினர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், ’தி இந்து’ வுக்கு நன்றி தெரி வித்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x