

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வீடு, வீடாக திமுகவினர் காலண்டர்களை விநியோகித்து வருவதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.
மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.நாகராஜனும், திமுக சார்பில் மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தமிழரசியும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் இரு தரப்பினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் தொடர்பாக ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகள் அச்சிடப்பட்ட காலண்டர்களை மானாமதுரையில் வீடு, வீடாக திமுகவினர் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுகவினர் மீது தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் காலண்டர் விநியோகித்த பகுதிகளில் விசாரித்து வருகின்றனர்.