‘உங்கள் வாக்குகளை விற்காதீர்கள்’: வீதி நாடகம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு

தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோயில் தெருவில் வாக்குகளை விற்காதீர் என விழிப்புணர்வு ஏற்படுத்திய சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவியர்.
தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோயில் தெருவில் வாக்குகளை விற்காதீர் என விழிப்புணர்வு ஏற்படுத்திய சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவியர்.
Updated on
1 min read

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்கவும், வாக்குகளை விற்பனை செய்யாதீர் எனவும் நடனம், வீதி நாடகம், பாடல், கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோயில் தெருவில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், மண்டலத் துணை வட்டாட்சியர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தால் தூக்கி போடுங்கள் என்ற விழிப்புணர்வுப் பாடலை பாடி வீதி நாடகத்தை நடத்தினர். ஆசிரியர்கள் செல்வமீனாள், முத்துமீனாள், தர் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in