

‘‘ஆண் வாரிசுகள் இருந்தாலும் கைவிடப்பட்ட முதியோருக்கு ஓய்வூ தியம் வழங்கப்படும்,’’ என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் தெரிவித்தார்.
காளையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் அவர் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் பழனிசாமி எங்களிடம் கூறும்போது 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கொடுக்க ஆணை வழங்கியுள்ளேன். ஆனால் 1.5 லட்சம் பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கி வருகின்றனர். அதனால் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி விடுபட்டவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது அரசு விதிமுறையில் ரூ.5 ஆயிரத்துக்குக் கீழ் சொத்து இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. அதனால், அதை உயர்த்த வேண்டுமென முதல்வரிடம் கேட்டுக் கொண்டேன். உடனடியாக சொத்தின் மதிப்பை ரூ.1 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டார். அதன்பிறகே, ஏராளமானோருக்கு ஓய்வூதியம் கிடைத்து வருகிறது.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆண் வாரிசுகள் இருந்தாலும் கைவிடப்பட்ட முதியோருக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.